ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

ஞாயிறு, 7 நவம்பர், 2010

வாழ்வார் என்றும்!
-------------------------------------------------------------------
முனைவர் க.தமிழமல்லன் 97916 29979

நரிக்கும்ஓ நாய்க்கும்நல் நண்பன் என்றே
நயவஞ்சப் பிரெஞ்சரசைச் சொல்வார்! அந்நாள்,
சரியாக இயக்கத்தை நடத்தி வந்த,
சலியாத போராளி சுப்பை யாவை,
நெரிக்கின்ற சூழ்ச்சியெலாம் அடுத்த டுத்து,
நிகழ்த்தியது! சிரித்தவண்ணம்! அதன்பொய்த் தோலை
உரிக்கின்ற தோழர்சுப் பையா வுக்கே,
உரிமையில்லை தேர்தலில்நிற் பதற்கே என்றார்!

குடியுரிமை இல்லையெனச் சுப்பை யாமேல்,
கொடுவழக்கைப் பிரெஞ்சரசு போட்ட போதும்
குடியுரிமை நிலைநாட்டி வெற்றி பெற்றார்!
கூறினார்கள், மறுகுற்றம்! அவருக் குத்தான்,
அடியோடு பிரெஞ்சுமொழி தெரியா தென்றும்,
ஆய்கின்ற குழுவார்க்குச் சொன்னார்!ஆனால்,
முடிவெடுக்கும் குழுஉறுப்பாய் அவர்இ ருந்தார்!
முடிந்திடுமா? சுப்பையாவை மறுப்ப தற்கே?

எத்தனையோ போராட்டம்! இன்னல் மேகம்,
இடும்பைமழை பொழிந்தபோதும், தொடர்ச்சி யாக
எத்திசையும் புகழ்மணக்க இயக்கம் கண்டார்,
இடரெல்லாம் இன்பம்போல் ஏற்றுக் கொண்டே!
எத்தனையோ பெருந்தடைகள் விளைத்த போதும்,
இடித்தொழித்துப் பாராள்மன் றத்திற் கும்நல்
வித்தகராய்ச் சட்டமன்றத் திற்கும் நின்றார்,
வென்றார்மக் கள்தலைவர். வாழ்வார் என்றும்!

புதன், 15 ஜூலை, 2009

அன்பு

அன்பு நாயகர்